மத்திய அரசை வெளியேற்ற காங்கிரஸ் கீழ்தரமான அரசியல் செய்கிறது

91

பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர்கள் கீழ்தரமான அரசியல் செய்து, பாகிஸ்தானிடம் உதவி கேட்டுள்ளதாக குறிப்பிட்டார். உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், ஆனால் காகிரஸ் கட்சியோ பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக குற்றம் சாட்டினார்.
மக்களின் நலனுக்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வரும் பா.ஜ.க. அரசு, பல்வேறு சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாகவும், நாட்டின் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமைபட கூறினார்.