நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு..!

183

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வைர வியாபாரி நீரவ்மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளனர். இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோடியின் சொத்துகள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

நீரவ் மோடி தற்போது பிரிட்டனில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை இந்தியாவிற்கு கொண்டு வர, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.