நீரவ் மோடி 11,300 கோடி மோசடி : இழப்புக்கு பஞ்சாப் வங்கி ஊழியர்கள் செயல்பாட்டில் ஏற்பட்ட தோல்வியே காரணம் – ரிசர்வ் வங்கி விளக்கம்.

333

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, மற்ற வங்கிகளுக்கு பணத்தை செலுத்த வேண்டுமென்று உத்தரவிடவில்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் தேசிய வங்கியில் நகைக்கடை உரிமையாளர் நீரவ் மோடி 11 ஆயிரத்து 300 கோடி மோசடி செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மற்ற வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, பஞ்சாப் வங்கி பணத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பணம் இழப்புக்கு பஞ்சாப் வங்கி ஊழியர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகளை மேற்பார்வையிடும் அமைப்பு என்ற அடிப்படையில், பஞ்சாப் வங்கியை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.