பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மோசடி செய்த, நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

457

பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மோசடி செய்த, நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
வைர வணிகர் நீரவ் மோடி தனக்கு சொந்தமான பயர் ஸ்டார் நிறுவனம் சார்பில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவனங்களை சமர்பித்து 11 ஆயிரத்து 330 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நீரவ் மோடி, அவரது குடும்பத்தினர், வர்த்தக கூட்டாளிகள், வங்கி ஊழியர்கள் மீது சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவல் வெளியானதை அடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத்துறை அறிவித்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை முடக்கியுள்ளது.