நீரவ் மோடியின் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி வழக்கு : பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் பணி நீக்கம்

162

நீரவ் மோடியின் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் இயக்குனர் உஷா அனந்த சுப்பிரமணியத்தை பணிநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடினார். இந்த மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனாக இருந்த உஷா அனந்த சுப்பிரமணியன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடிக்கு பின்னர் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒரு சாதாரண வங்கி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த அவரை மத்திய அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.