தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்த தடை ஏதும் இல்லை : மாவட்ட ஆட்சியர் ஷில்பா விளக்கம்

292

தாமிரபரணி ஆற்றில் இரு இடங்களை தவிர மற்ற இடங்களில் புஷ்கர விழா நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓடி கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில், 144 வருடங்களுக்குப் பின்னர் புஷ்கரம் விழா நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அக்டோபர் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த விழா நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, படித்துறைகள் மற்றும் தீர்த்தக் கட்டங்களைச் சுத்தம்செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் புஷ்கர விழா நடத்த தடை விதிக்கப்படுவதாக திடீரென தகவல் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இருஇடங்களை தவிர மற்ற இடங்களில் தடை விதிக்கவில்லை என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். இதே போல் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவும் புஷ்கர விழா நடத்த தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.