நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரட் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

247

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரட் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் தமிழகம் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இடு பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் கேரட் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. உதகை காய்கறி சந்தையில் 1 கிலோ கேரட் 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது4 ஆண்டுகளுக்கு பிறகு கேரட் விலை உயர்ந்துள்ளதாக நீலகிரி மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.