நில மோசடி விவகாரத்தில் சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனத்திற்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

205

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எப் என்ற கட்டுமான நிறுவனமும் இணைந்து நில மோசடி ஊழலில் ஈடுபட்டு உள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ராஜஸ்தானில் நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில், நில மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளான வதேராவின் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது நிதிநிலை அறிக்கையை நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை ராபர்ட் வதேரா ஏற்கனவே மறுத்துள்ளநிலையில், இது பழிவாங்கும் அரசியல் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.