நிலக்கோட்டை அருகே அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்

151

நிலக்கோட்டை அருகே அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து அரசுப்பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.