உயரத்திலிருந்து திடீரென ஒவ்வொரு குரங்குகளாக கீழே விழுந்து உயிரிழப்பு..!

157

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தாய் குரங்குகள் இறந்தும் தன் குட்டிகளை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கீழ்கோத்தகிரி அம்மன் நகரில் சுமார் 60 க்கும் மேற்பட்ட குரங்குகள் அந்த பகுதியில் உலாவி வந்துள்ளன. அவ்வப்போது உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்து கிடைக்கும் பொருட்களை தூக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகில் உள்ள மரத்திற்கு வந்துள்ளன. நள்ளிரவு திடீரென உச்சியிலிருந்து ஒவ்வொரு குரங்குகளாக கீழே விழுந்துள்ளது. அருகில் இருந்த பொது மக்கள் வனதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.இதில் பிறந்து சில தினங்களே ஆன நிலையில் இருந்த 4 குட்டிகளை உயிருடன் மீட்டனர். ஆனால் 6 பெண் குரங்குகல் மற்றும் 3 ஆண் குரங்குகள் என மொத்தம் 9 குரங்குகள் கவலைக்கிடமாக உயிரிழந்தது.உயர்ந்த அடியில் இருந்து விழுந்த தாய் குரங்குகள் இறந்தன ஆனால் அதனுடைய குட்டிகள் கீழே விழுந்தும் தன் தாயை இருக்கி பிடித்தபடி உயிருடன் இருந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வனதுறையினர் மருத்துவர்களின் ஆய்வுகளுக்கடுத்து விசாரணை மேர்கொள்ள உள்ளனர்.