ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரர் நிகி ஹாலே டெல்லி குருத்துவாராவில் வழிப்பாடு..!

251

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரர் நிகி ஹாலே டெல்லி குருத்துவாராவில் வழிப்பாடு நடத்தினார்.

2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர் நேற்றையதினம் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சீக்கிய குருத்துவாராவுக்கு சென்ற நிகி ஹாலே அங்கு வழிப்பாடு நடத்தினார். அப்போது குருத்துவாராவில் உள்ள உணவு தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த பெண்களுடன் இணைந்து சப்பாத்தி தயாரித்தார்.