நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் 70 பேர் உயிரிழப்பு!

360

நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் 70 பேர் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு, தென் கிழக்கு பகுதிகளில் இரண்டு பிரிவினர்கள் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வன்முறையாளர்கள் ஒவ்வொரு வீடாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டு மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளை சுட்டுக்கொல்வதாக மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டுக்கு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.