நைஜிரியா அகதிகள் முகாமில் இருந்த 200 பேர் பட்னியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

124

ஆப்பிரிகா நாடான நைஜிரியாவில் போஹகராம் தீவிரவாதிகள் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தாக்குதல் அதிகமாக உள்ளது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். போஹகராம் பகுதியிலிருந்து தப்பிய 24 ஆயிரம் பேர், அங்குள்ள பமா என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கினர். உணவு மற்றும் மருந்து பொருட்களை முகாமிற்கு கொண்டு செல்வதை தீவிரவாதிகள் தடுத்துள்ளனர். இதனால் முகாமில் உள்ள 200 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.