நியூயார்க்கில் நடைபெற்ற குண்டு பெண்களுக்கான பேஷன் ஷோ : ஏராளமான பெண்கள் உற்சாகம்.

237

நியூயார்க்கில் நடைபெற்ற குண்டு பெண்களுக்கான பேஷன் ஷோவில், ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

குண்டாக இருக்கும் பெண்களுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பு நிறுவனம் Torrid. தாங்கள் விரும்பிய உடையை அணியும் வகையில் ப்ளஸ் சைசில் ஆடைகளை வடிவமைத்தன் மூலம், குண்டாக இருக்கும் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், torrid நிறுவனம் ஒரு புது முயற்சியாக ப்ளஸ் சைஸ் பெண்கள் பங்கேற்கும் பேஷன் ஷோவை நடத்தியது. இந்த பேஷன் ஷோவில் பங்கேற்றதன் மூலம், தங்களின் மிகப்பெரிய கனவு நிறைவேறியதாக அதில் பங்கேற்ற பெண்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். பல்வேறு வகை உடைகளை அணிந்து குண்டு பெண்கள் ஒய்யார நடை நடந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இதனிடையே, நியூயார்க்கில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வசந்த கால ஆடை ரகங்களின் பேஷன் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டு ஆடை ரகங்கள் இடம்பெற்றிருந்தன. எம்பிராய்டரி டிசைன்கள் மற்றும் பல வண்ண நிறங்களில் மாடல் அழகிகள் ராம்ப் வாக் வந்தது கண்களை கவரும் வகையில் அமைந்தது.