தென்னை மரம் விழுந்து முன்னாள் செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு !

577

தென்னை மரம் வேறுடன் சாய்ந்ததில் முன்னாள் செய்தி வாசிப்பாளர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
காலை பயிற்சி சென்ற முன்னாள் தூர்தர்ஷர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காஞ்சன் ராஜாநாத். இவர் யோகா ஆசிரியராகவும் உள்ளார். இவர் வழக்கம்போல காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது காஞ்சன் ராஜாநாத் மீது, சாலையோரம் நின்றிருந்த தென்னை மரம் வேறுடன் பெயர்ந்து விழுந்தது. இதனை படுகாயமடைந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செய்தி வாசிப்பாளர் காஞ்சன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்த தென்னை மரத்தை அகற்ற வேண்டும் என அனுமதி கோரியும் நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்ததே இந்த விபத்திற்கு காரணம் என காஞ்சனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.