ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் | அதிகாரிகள் நேரில் ஆய்வு

194

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 65 கோடி ரூபாய் செல்வில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிவரை மூன்றரை கிலோ மீட்டர் தூத்திற்கு குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்து சோதனையொட்டம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, 50 வேகன்களில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் 4 தவணைகளில் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.