துணை ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு..!

113

டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மத்திய அமைச்சர்கள் சந்தித்து ஆசி பெற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பின், குடியரசு தலைவர் மற்றும் துணை ஜனாதிபதியை அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திரநாத் பாண்டே உள்ளிட்டோர் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்தும், திட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.