டெல்லியில் கார்கில் போர் வெற்றியின் நினைவாக ஓட்டம்..!

95

கார்கில் போர் வெற்றியின் நினைவாக டெல்லியில் நடைபெற்ற பெருந்திரள் ஓட்டத்தில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் கார்கில் என்னுமிடத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை இந்தியப் படையினர் தாக்கி அழித்தனர். இந்தப் போரில் இந்தியா பெற்ற வெற்றியின் இருபதாம் ஆண்டு நினைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் வெற்றி ஓட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி விஜய் சவுக்கில் தொடங்கிய ஓட்டத்தை லெப்டினன்ட் ஜெனரல் அஸ்வானி குமார் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர். விஜய் சவுக்கில் தொடங்கிய ஓட்டம் இந்தியா கேட்டில் முடிவடைந்தது.