புது டெல்லியில் 277 பேருக்கு டெங்கு பாதிப்பு! மாநகராட்சி தகவல்!!

204

புது டெல்லி, ஆக. 17–
புது டெல்லியில் மழைக்கால பருவத்தில் மட்டும் 227 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டெல்லி மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
புது டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வறட்சியை தொடந்து பருவமழை அதிகளவில் பெய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு குர்கான்-டெல்லி நெடுஞ்சாலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு டெல்லியில் மிக அதிகம். 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 15,867 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில் 60 பேர் உயிரிழந்தனர். எனவே மழைக்கால டெங்கு பாதிப்பை தடுக்க டெல்லி மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 227 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, கடந்த மே மாதம் 9 பேரும், ஜூன் மாதம் 15 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 91 பேரும், ஆகஸ்டு மாதம் தொடங்கி இந்த இரு வாரங்களில் மட்டும் 106 பேரும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த மழைக்கால பருவத்தில் மட்டும் மொத்தம் 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.