வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

244

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நாடா புயல் வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது படிப்படியாக வலுவடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், புயல் சின்னமாக மாறும் எனவும், வருகின்ற 9-ம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையைக் கடக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புயல் தமிழக கடற்கரையை நோக்கி வந்தால், தமிழகத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.