2 ஆயிரத்து 467 கோடி மதிப்பில் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

2436

சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 467 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், சென்னை, குவாஹாத்தி, லக்னோ விமான நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் ஆண்டுக்கு மூன்றரை கோடி பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான முனையம் 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த விமான முனையத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரபு குறிப்பிட்டார். புதிய முனையம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 40 விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.