நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்..!

135

தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என 2010-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ்த்தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள் உள்பட ஏராளமான அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்நிலையில் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மலையை குடைந்து 2 கிலோமீட்டர் நீளத்துக்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும். அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என சூழல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆய்வகத்தால் எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது