சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி ரஷ்யாவில் தங்கியதற்கான ஆதாரம் இல்லை! மத்திய அரசு தகவல்!!

394

புதுடெல்லி, ஜூலை.30–
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஷ், கடந்த 1945–ம் ஆண்டிலும் அதன் பிறகும், ரஷ்யாவில் தங்கி இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று நேதாஜி தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள 25 புதிய ரகசிய ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
நேதாஜி தொடர்பாக 25 புதிய ரகசிய ஆவணங்களை டெல்லியில் மத்திய கலாசாரத் துறை செயலரான என்.கே. சின்கா நேற்று வெளியிட்டார்.
அந்த ஆவணங்களில், கடந்த 1992–ம் ஆண்டு ஜனவரி 8–ம் தேதி, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம் ஒன்று உள்ளது.
அதில், கடந்த 1945–ம் ஆண்டும் அதன் பிறகும், ரஷ்யாவில் நேதாஜி இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1945–ல் தைபேயில் நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், அந்த விபத்தில் அவர் இறக்கவில்லை என்றும் அவர் ரஷ்யாவுக்கு சென்றுவிட்டதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய ரகசிய ஆவணத் தகவலால் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.