நேபாளத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் இரவு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது..!

208

நேபாளத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல் இரவு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாஷ் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டனர். இந்த நிலையில், அங்கு பெய்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால், தமிழர்கள் உட்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், ஜூலை 2 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் சிக்கித்தவித்த தமிழர்கள் நேற்று முந்தினம் சென்னை வந்தடைந்தனர். இதனிடையே உயிரிழந்த ராமசந்திரனின் உடல் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.