முன்னாள் நேபாள பிரதமர் பிம்லேந்திர நிதி தனது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலை கோவிலில் சுவாமி தரிசனம்!

318

முன்னாள் நேபாள பிரதமர் பிம்லேந்திர நிதி தனது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் பிம்லேந்திர நிதி தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வருகை தந்து, திருமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய மரியாதை செய்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.