நேபாளத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 77 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்..!

942

நேபாளத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 77 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வங்க தேசத்தின் டாக்காவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்றது. திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 77 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீட்பு பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.