நேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..!

144

நேபாளத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பேரழிவு மீட்புப்படையினர் அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தலைநகர் காட்மண்டுவின் பெரும்பகுதி மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நிலச்சரிவுகள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரதமர் சர்மா ஒலி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.