நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியும் நாராயணசாமிக்கு முதலமைச்சர் பதவி ஆசை வந்துவிட்டதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

293

நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியும் நாராயணசாமிக்கு முதலமைச்சர் பதவி ஆசை வந்துவிட்டதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதராவாக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சட்டமன்ற பொதுத்தேர்தலில் நிற்காமலும், நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்றவரை விலைக்கு வாங்கி, இடைத்தேர்தலில் போட்டியும் நாராயணசாமிக்கு முதலமைச்சர் பதவி ஆசை வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இவருக்கு சரியான பாடம் மக்கள் புகட்ட, மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று ரங்கசாமி கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் சிவி சண்முகம், செம்மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.