நெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.

209

நெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில், என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தருவது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரங்கசாமி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்று கூறினார். புதுச்சேரி மாநிலம் மற்றும் மக்கள் நலனுக்காக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தர என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக ரங்கசாமி தெரிவித்தார்.