கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா

116

நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் முக்கியமானது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான தைப்பூச திருவிழா காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற அலங்கார தீபாராதணையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தி கோஷங்களை எழுப்பிய அவர்கள், காந்திமதி அம்பாளை சிறப்புடன் வழிபட்டனர்.