தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக, மதிமுக பொதுச் செயலாள..

236

தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பிறந்த நாள் மாநாடு தஞ்சையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தார். இலங்கை அரசின் மீன்பிடி சட்ட விவகாரத்தில் ஏழரை கோடி மக்களின் நலன் முக்கியமாக அல்லது இலங்கையின் நலன் அவசியமா என்று மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற தைரியத்தில் தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக வைகோ கண்டனம் தெரிவித்தார்.