நெல்லை அருகே கேரளாவில் இருந்து ரசாயன மற்றும் கோழிகழிவுகளை கொட்டிய மினி லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்

231

நெல்லை அருகே கேரளாவில் இருந்து ரசாயன மற்றும் கோழிகழிவுகளை கொட்டிய மினி லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்
நெல்லை அருகே உள்ள காவல்கிணறு பகுதியில் ரசாயன மற்றும் கோழிக்கழிவுகள், கொட்டப்படுவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் அந்த லாரி கேரளாவில் இருந்து கோழிகழிவுகளை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைப்பதை கண்ட லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பொதுக்கள் கொடுத்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்