நெல்லையில், உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது போலி தேநீர் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

303

நெல்லையில், உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது போலி தேநீர் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் கடைகளில் போலி தேயிலை தூள் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலி தேயிலை தூள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. கடையின் உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியிலான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோன்று குளிர்பான கடைகள், உணவகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.