கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.!

600

கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களுக்கு நெல்லையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து தன் குடும்பத்துடன் தீக்குளித்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்கு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை சிந்துபூந்துறை மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதனிடையே கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்ததற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பிணவறை முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர்.ice_screenshot_20171024-160312