நெல்லை டவுணில் புது ஆடைகள் எடுக்க ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்!

318

நெல்லை டவுணில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், பாதுகாப்பிற்காக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கியதையொட்டி நெல்லை டவுணில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தென்காசி, அம்பை, பாபநாசம், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க வந்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், வடக்கு ரதவீதியில் ஏராளமானோர் புத்தாடைகள் எடுக்க குவிந்தனர். இதனால் பாதுகாப்பிற்காக போலீசார் சார்பில் டவுண் பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.