நெல்லையில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை | கத்தி முனையில் 100 சவரன் நகைகள் கொள்ளை..!

331

நெல்லையில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்த திருடர்கள் பெண்களை கட்டிப் போட்டு 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் பெலிகான். இவர் அதே பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பிற்பகலில் இவரது மனைவி மற்றும் மகள் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் கதவை தட்டி அதிரடியாக உள்ளே நுழைந்தனர். கத்திமுனையில் மிரட்டிய அவர்கள், இரண்டு பேரையும் கயிற்றால் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 100 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களையும் திருடி கொண்டு தப்பியோடினர். தடயங்களை சேகரித்தும், மோப்பநாய்களை வரவழைத்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.