சங்கரன்கோவில் அருகே மாணவியை தவறாக பேசிய பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

364

சங்கரன்கோவில் அருகே மாணவியை தவறாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் குரல் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூரில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, பள்ளி கட்டணம் கட்டாததால் மாணவி ஒருவரை தரை குறைவாக பேசி, வகுப்புக்கு வெளியே நிறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அந்த மாணவி, மத்திய குழந்தைகள் நலக்குழுவை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீதும், பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.