நெல்லை மாவட்ட மீனவர்களின் போராட்டத்தால் தொடரும் பதற்றம்

175

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இடிந்தகரை, கூத்தப்பனை, கூடுதாழை, சோமையார்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பதால் நூற்றுக் கணக்கான படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே மீனவர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.