நெல்லையில் மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

293

நெல்லையில் மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் துவக்கி வைத்தார். தொடக்கவிழாவையொட்டி மாணவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 மண்டலங்களிலும் பங்கேற்று, முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் மோத உள்ளனர். இதில் முதல் நாள் போட்டி நாக் அவுட் முறையிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் போட்டிகள் லீக் முறையிலும் நடைபெறுகிறது.