சிபிஎஸ்இ-க்கு நிகராக 11-ம் வகுப்பு பாடங்கள் – அமைச்சர் செங்கோட்டையன்

172

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் டேப் சாதனத்தின் மூலம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து, இரண்டாம் கட்டமாக கேரளாவுக்கு ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்றார். பதினொன்றாம் வகுப்பு படப்புத்தகம் சிபிஎஸ்இ-க்கு நிகராக இருக்கும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் டேப் சாதனத்தின் மூலம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இதற்கான பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என குறிப்பிட்டார்.