நெல்லையில் தனியார் பள்ளி திடீரென்று மூடப்பட்டதால், தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

196

நெல்லையில் தனியார் பள்ளி திடீரென்று மூடப்பட்டதால், தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தமடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததால், திடீரென்று பள்ளியை இழுத்து மூடப்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாமலும், காலாண்டு தேர்வு எழுத முடியாமலும் தவித்து வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.