கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களிடம் கைவரிசை காட்டிய 6 கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

198

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களிடம் கைவரிசை காட்டிய 6 கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த செல்வி மற்றும் ரேகா என்ற பயணிகளிடம் பணப்பையை பெண் ஒருவர் திருடியுள்ளனர். இதனை கவனித்த மற்ற ரயில் பயணிகள் சத்தம் போட்டதும், பணப்பையை திருடிய பெண் உள்பட 5 பெண்கள் ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் 5 பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் பிடிபட்டுள்ளார். அவர்களிடம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 45 பேர் கொண்ட கும்பல், குமரி மாவட்டத்தில் ஊடுருவி உள்ளதாகவும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிவந்ததும் தெரியவந்துள்ளது.