தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் விழா | இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்பு

123

தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பாளையங்கோட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.