நெல்லையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

180

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள குருங்காவனத்தை சேர்ந்த பெரியசாமி, வட்டி தொழில் செய்து வந்தார். இது தொடர்பான தகராறில், கடந்த 2007ம் ஆண்டு பெரியசாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன் உட்பட அவரது உறவினர்கள் 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் நெல்லை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துக்கிருஷ்ணன், குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், மயில்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், இரண்டு பேரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.