ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் | பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

1224

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பழையபேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குட்டி என்கிற சுடலை, கடந்த 3ஆம் தேதி இரவு டவுண் ஆர்ச் அருகே மர்ம நபர்கள் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், சுடலை வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பெயர் கொண்ட இருவரை கைது செய்தனர். அவர்களில் ஒருவரது மனைவியுடன் சுடலைக்குத் தவறான தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை அதுகுறித்து கண்டித்தும் கேட்காததால் சுடலையை வெட்டிக் கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.