நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீசாரை தாக்கிவிட்டு கைதியை பொதுமக்கள் மீட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

658

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீசாரை தாக்கிவிட்டு கைதியை பொதுமக்கள் மீட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணிகள் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மருகால்குறிச்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான உதயகுமார் தரப்பினருக்கும், மஞ்சன்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சுடலைக்கண்ணு ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆறுமுகம் தரப்பினரை தாக்கியதாக உதயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொண்டு சென்றனர்.இந்நிலையில் நீதிமன்றம் செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை வழிமறித்த சிலர் காவலர்களை தாக்கி, உதயகுமாரை மீட்டுச் சென்றுள்ளனர்.மேலும் காயம் அடைந்த 4 காவலர்கள் பாளையங்கோட்டை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,பொதுமக்கள் வந்த வாகனத்தை பறிமுதல் செய்ததோடு போலீசாரை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.