நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை …!

445

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.