மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம்..!

306

நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் கார்த்திக் பாட்டு பாடி பொதுமக்களிடம் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தலின் போது வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என கூறினார். பிரச்சாரத்தின் போது நடிகர் கார்த்திக் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நிகழ்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.