அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தல்

197

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து, கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இடிந்தகரை, கூத்தப்பனை, கூடுதாழை, சோமையார்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை தொடர்வதால் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மீனவர்களும் ஆர்ப்பாட்டங்களில் குதித்து இருப்பதால் தமிழகமே போராட்டக் களமாகி உள்ளது.