ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி காளைகளை நெல்லையிலிருந்து டெல்லிக்கு அனுப்பும் நூதன போராட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஈடுபட்டனர்.

179

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி, நெல்லையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளை பிரதமருக்கு ரெயில் மூலம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.என். கிராமத்தில் அழைத்து வரப்பட்ட இரண்டு காளைகளுக்கு டிக்கெட் எடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சென்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.